Cricket

ஆட்டம்னா இதுதான் ஆட்டம்… செமயா ஆடுனாங்க பாகிஸ்தான் பெண்கள் அணி!!

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த  லீக் ஆட்டமானது கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது.

இந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் துவக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு டஃப் கொடுத்து ஆடி வந்தனர்.  வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகள் துவக்கம் முதலே சொதப்பினாலும் கேப்டன் டெய்லர் – கேம்ப்பெல் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

ஆட்டம்னா இதுதான் ஆட்டம்… செமயா ஆடுனாங்க பாகிஸ்தான் பெண்கள் அணி!!

கேப்டன் டெய்லர் 43 ரன்களில் அவுட் ஆக, சிறிது நேரத்தில் கேம்ப்பெலும் 43  ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்த நிலையில், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அடுத்து 125 ரன்கள் தேவை என்ற இலக்கினை நோக்கி பாகிஸ்தான் அணி சார்பில் துவக்க வீராங்கனைகளாக முனீபா அலி மற்றும் ஜவெரியா கான்  களம் இறங்கினர்.

சிறப்பான துவக்கத்தினை இந்த ஜோடி அமைத்துக் கொடுத்த நிலையில் முனீபா அலி 25 ரன்களில் அவுட் ஆக, தொடர்ந்து ஜவெரியா கான் 35 ரன்களில் அவுட் ஆனார்.

கேப்டன் பிஸ்மா மரூஃப் 38 ரன்கள் எடுத்து களத்தில் இருக்க, பாகிஸ்தான் 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பெர்ராவில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தாய்லாந்தை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Related posts

அவங்க இருந்திருந்தா… எப்படியும் ஆகி இருக்கலாம்… வங்கதேச அணியின் கேப்டன் கருத்து!!

TamilSportsNews

சர்வதேச போட்டிக்கு திரும்ப வாய்ப்பில்லை… ஐபிஎல்லில் விளையாடுவார்.. கபில்தேவ் கருத்து

TamilSportsNews

வைரலான புத்தாண்டுக் கொண்டாட்ட போட்டோக்கள்… தோனியுடன் கொண்டாடிய ஹர்திக் பாண்டியா!

TamilSportsNews

Leave a Comment