Cricket

மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்… அசத்தலாக ஆடிய இங்கிலாந்து!!

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த 12  வது லீக் ஆட்டமானது கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது.

இந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி சார்பில் துவக்க வீராங்கனைகளாக எமி ஜோன்ஸ், டேனி வியாட் ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் இந்த துவக்க ஜோடி பெரிய அளவில் சிறப்பான துவக்கத்தினைக் கொடுக்கவில்லை.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹீதர் நைட்- ஸ்கிவர் ஜோடியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வந்தது. நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடியைப் பிரிக்க பாகிஸ்தான் அணி திணறியது.

அரை சதத்தினை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கேப்டன் ஹீதர் நைட் 62 ரன்களில் அவுட் ஆகினார், அதேபோல் நிலைத்து நின்று ஆடிவந்த ஸ்கிவர் 36 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆக, இறுதியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

அடுத்து 159 ரன்கள் தேவை என்ற இலக்கினை நோக்கி பாகிஸ்தான் விளையாடியது. துவக்க வீராங்கனைகளும் சரி, மற்ற வீராங்கனைகளும் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை வீராங்கனை அலியா ரியாஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் 116 ரன்கள் எடுத்திருக்க, இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

கனேரியா மீது மதப் பாகுபாடு… உண்மையை உடைத்தார் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர்!!

TamilSportsNews

கோலிக்கு நெத்தி அடி. ரெக்கார்டு பிரேக் செய்த ரோஹித் சர்மா.!

TamilSportsNews

ஒருவழியா நடத்தியாச்சு… 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த ஆட்டம்!!

TamilSportsNews

Leave a Comment