Cricket

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மனைவிக்கு அனுமதி வழங்காததால் போட்டியில் பங்கேற்க மறுத்த பாகிஸ்தான் வீரர்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில், விளையாட்டுத் துறையினைப் பொறுத்தவரை டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை, ஐபிஎல் போன்ற முக்கிய போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

ஏறக்குறைய 4 மாதங்கள் ஆனபின்னர் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது ஐசிசியின் அறிவுறுத்தல்களின்படி தக்க கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் தன் மனைவியை உடன் அழைத்துவர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மனைவிக்கு அனுமதி வழங்காததால் போட்டியில் பங்கேற்க மறுத்த பாகிஸ்தான் வீரர்!!

அதாவது இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியானது. தற்போது அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது ஹாரிஸ் சோகைல் 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது, தங்கியிருந்த ஓட்டலில் ஏதோ ஒரு பயங்கரமான உருவத்தை பார்த்து பயந்துவிட, அதன்பின்னர் வெளிநாட்டு போட்டிகளின் போது தனது மனைவியை உடன் அழைத்து சென்று வந்தார்.

இந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரது மனைவியை அழைத்துவர அனுமதி மறுத்ததையடுத்து அவர் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறிவிட்டாராம்.

Related posts

ஷீலா கி ஜவானி பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடியுள்ள டேவிட் வார்னர் … இந்திய ரசிகர்கள் வாழ்த்து!!

TamilSportsNews

வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை வீடியோ மூலம் நடத்தலாம்… பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு!!

TamilSportsNews

தங்க மனசுக்காரங்க… அவங்களை பழி எல்லாம் வாங்க மாட்டோம்.. கோலி பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment