Cricket

கொரோனா பாசிட்டிவ் வீரர்கள் அழைப்பினை நிராகரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள்!!

மேலும் இங்கிலாந்து கிளம்பும் முன் 2 கட்டங்களாக கொரோனா பரிசோதனை நடத்த நினைத்திருந்த நிலையில், முதல் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆல்-ரவுண்டரான முகமது ஹபீஸ் மீண்டும் தன் குடும்பத்தினருடன், மற்றொரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, ஹபீசுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு அதனை அவரே ஊடகங்களுக்கும் அறிவித்தார்.

இந்நிலையில் ஹபீஸ் எங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார் என்று பாகிஸ்தான் சிஇஓ வாசிம் கான் குற்றம் சாட்டினார், ஆனால் மற்றொருபுறம் கொரோனா பாசிட்டிவ் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான ஆதரவு அளிக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் இன்சமாம் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனா பாசிட்டிவ் வீரர்கள் அழைப்பினை நிராகரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள்!!

அதாவது, “கொரோனா பரிசோதனைக்குப் பின்னர், கொரோனா பாசிட்டிவ் வீரர்களின் செல்போன் அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது முக்கியம். நாம் சரிவர அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில், அவர்களும் முகமது ஹபீஸ் போன்ற முடிவினையும் எடுக்கலாம்.

மேலும் அவர்களை வீட்டிற்குள்ளே இருக்கச் செய்வதைவிட தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் சென்று அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும்வரை நாம் உதவி செய்தல் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts

இதோ ரெடி.. நியூசிலாந்து புறப்பட்ட இந்திய அணி… அணி வீரர்கள் விவரம் இதோ!!

TamilSportsNews

தங்க மனசுக்காரங்க… அவங்களை பழி எல்லாம் வாங்க மாட்டோம்.. கோலி பேட்டி!!

TamilSportsNews

20 சதவீதம் அபராதம்… மெதுவா வீசினதுதான் காரணம்… ஐசிசி அறிவிப்பு!!

TamilSportsNews

Leave a Comment