Cricket

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் போட்டியில் இருந்து விலகிய பாகிஸ்தான் அணி வீரர் பஹர் ஜமான்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

அதாவது நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி 20 போட்டியானது டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி துவங்குகிறது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் போட்டியில் இருந்து விலகிய பாகிஸ்தான் அணி வீரர் பஹர் ஜமான்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ பபுள் சூழலை உருவாக்கும் பொருட்டு பாகிஸ்தான் வீரர்கள் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர். அதாவது பாகிஸ்தானில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்துவரும் நிலையில், அவர்களுக்கு நேற்று முன் தினம் கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டது. இந்த கொரோனா பரிசோதனை முடிவானது நேற்று வெளியானது.

இந்த கொரோனா பரிசோதனை முடிவில், பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்றே முடிவு வந்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பஹர் ஜமானுக்கு காய்ச்சல் இருப்பதால், அவர் நியூசிலாந்து பயணம் மேற்கொள்ளவில்லை.

Related posts

இப்படி இருந்தா.. கப் இல்ல கப் ஐஸ் கூட கிடைக்காது… கடுப்பில் கோலி!!

TamilSportsNews

முருகன் அஸ்வினை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை.. சச்சின் வருத்தம்!!

TamilSportsNews

வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புங்க… இவங்களுக்கு சாம்பியன் பட்டம் கொடுங்க… அப்ரிடி யோசனை!!

TamilSportsNews

Leave a Comment