Cricket

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 20 பேர் மட்டுமே இங்கிலாந்து பயணம்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பொருட்டு பாகிஸ்தான் அணியில் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் நேற்று லாகூரில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டனர். ஆகஸ்டு மாதம் போட்டி நடைபெறவுள்ள நிலையில், போட்டி துவங்கும் முன்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக வெகு முன்னதாகவே இங்கிலாந்து புறப்பட்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 20 பேர் மட்டுமே இங்கிலாந்து பயணம்!!

கொரோனாத் தொற்று ஏற்பட்ட 10 வீரர்களைத் தவிர்த்து பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை 20 வீரர்களும், பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் மற்ற ஊழியர்கள் என 11 பேரும் மொத்தமாக 31 பேர் கிளம்பினர். கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள வீரர்கள் தற்போது சுய தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியதாவது, “பல மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து மிகுந்த ஆர்வத்தில் உள்ளோம். ஊரடங்கு காலத்தில் உடல்தகுதியில் கவனம் செலுத்திய நிலையில் தற்போது மீண்டும் களம் திரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Related posts

வருத்தமா இருக்கு… வாய்ப்புகள் கெடக்கல.. கேஎல் ராகுல் வருத்தம்!!

TamilSportsNews

கடைசிப் போட்டி… வாஸ் அவுட் ஆகுமா நியூசிலாந்து?… இதோ வீரர்கள் லிஸ்ட்!

TamilSportsNews

13 ரன் வேணும்.. விறுவிறுப்பான ஆட்டம்.. 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து

TamilSportsNews

Leave a Comment