Cricket WorldCup 2019

ஐசிசி விதிமுறையின் குளறுபடிகளை சரிசெய்யவேண்டும்- நியூசிலாந்து கேப்டன்

உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்சில் இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இதில் நியூசிலாந்து 241 ரன்கள் எடுத்தது, 2-வது பேட் செய்த இங்கிலாந்தும் 241 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ஆட்டம் ட்ரா ஆனது. அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதிலும் இரு அணியும் தலா 15 ரன் மட்டுமே எடுத்து ட்ராவில் முடிந்தது.

ஐசிசி விதிமுறையின் குளறுபடிகளை சரிசெய்யவேண்டும்- நியூசிலாந்து கேப்டன்

இதையடுத்து பிரதான ஆட்டம் மற்றும் சூப்பர் ஓவர் இரண்டையும் சேர்த்து அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து (26 பவுண்டரி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து (17 பவுண்டரி) தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது.


தற்போது இரண்டு முறை டை ஆனதால் இந்த கோப்பையை இங்கிலாந்து, நியூசிலாந்து இரு அணிக்கும் கூட்டாக பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று பலரும் வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர், அந்த வரிசையில் தற்போது யோநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட்டு இதனை ஆதரிக்கும்விதமாகப் பேசியுள்ளார்.

இது குறித்து கேரி ஸ்டீட் அளித்த பேட்டியில், ‘ஆட்டம் சமனில் முடிந்ததும் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்குவது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து இருக்க வேண்டும். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இது பற்றி யோசிக்க வேண்டும்.

இந்த விதியை அவர்கள் எழுதும் போது உலக கோப்பை இறுதிப்போட்டியில் இவ்வாறு நடக்கும் என்று ஒரு போதும் நினைத்து இருக்கமாட்டார்கள். சூப்பர் ஓவர் விதிமுறை மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை மாற்றுவது குறித்து ஆராய வேண்டும்’ என்றார்.


Related posts

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை- விராட் கோலி

TamilSportsNews

பாகிஸ்தான் வீரர்களின் டயட்டீசியன் நான் இல்லை- பொங்கும் சானியா மிர்சா

TamilSportsNews

இம்ரான் தாஹிரிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது- பிளிஸ்சிஸ்

TamilSportsNews

Leave a Comment