Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் நவோமி ஒசாகா

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் இருந்து வந்தது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது.

தற்போது பயோ பபுள் முறையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா பெலாரஸ் வீராங்கனை அஸ்ரென்காவுக்கு எதிராகக் களம் இறங்கினர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் நவோமி ஒசாகா

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் அஸ்ரென்கா எளிதில் கைப்பற்றினார். முதல் செட்டை இழந்ததைத் தொடர்ந்து நவோமி ஒசாகா 2 வது செட்டில் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2 வது செட்டை 6-3 என்ற கணக்கில் ஒசாகா கைப்பற்றினார். 

இருவரும் சமநிலையில் இருந்தநிலையில் 3 வது செட்டில் நவோமி ஒசாகா மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். மூன்றாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Related posts

2 வருஷத்துக்கு அப்புறம்… சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா ஜோடி.. ரசிகர்கள் வாழ்த்து!

TamilSportsNews

காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நவாமி ஒசாகா!!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், ஜோகோவிச் 2 வது சுற்றுக்குத் தகுதி

TamilSportsNews

Leave a Comment