Tennis

டொமினிக் தீம்மை களைப்படையச் செய்ததே என்னுடைய பெரிய சாதனை.. மெட்விடேவ் பேட்டி!!

ஏ.டி.பி. என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று முடிந்தது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றினைப் பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடினர்,

இந்தப் போட்டியின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் மற்றும் ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் களம் கண்டனர்.

டொமினிக் தீம்மை களைப்படையச் செய்ததே என்னுடைய பெரிய சாதனை.. மெட்விடேவ் பேட்டி!!

துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தினார். இதன்மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சாம்பியன் பட்டத்தைக் கையில் ஏந்திய டேனில் மெட்விடேவ் கூறும்போது, “என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் கடுமையாகப் போராடிப் பெற்ற வெற்றி இதுவாகும். டொமினிக் திம் போன்ற வீரஉக்கு எதிராக ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.

அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், நான் உடலளவில் களைப்படைந்து விட்டேன். இருப்பினும் மனதளவில் ஓரளவு நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டேன். டொமினிக் திம் ஓன்ற ஒரு வீரரை 3 செட்டுகள் கொண்ட போட்டியில் களைப்படைய செய்ததை என்னுடைய பெரிய சாதனையாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

ஆஸ்திரேலியா ஓப்பன்… 3 வது சுற்றுக்கு முன்னேறிய ஹாலெப், கிகி பெர்ட்டன்ஸ்

TamilSportsNews

1000 வது வெற்றியே எனது இலக்கு என்கிறார் செரினா வில்லியம்ஸ்!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் வெளியேறிய நடால், ஒசாகா

TamilSportsNews

Leave a Comment