Cricket

அதிரடியாக ஆடிய தமிழ்நாடு அணி… டஃப் கொடுத்த மும்பை..

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்று முன் தின முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. ஆதித்யா டரே 69 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அதிரடியாக ஆடிய தமிழ்நாடு அணி… டஃப் கொடுத்த மும்பை..

நேற்றைய 2 வது நாள் ஆட்டத்தில் டரே – போய்ர் ஜோடியாக களம் இறங்கியது, போய்ர் 5 ரன்களில் அவுட் ஆகினார். அடுத்து அட்டார்டே களம் இறங்கினார். இவர் டரே உடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டரே சிறப்பாக விளையாடி சதத்தினைப் பூர்த்தி செய்தார். அட்டார்டே 58 ரன்கள் எடுத்தார். அடுத்து தேஷ்பாண்டே 39 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து தமிழ்நாடு அணி இன்றைய 2 வது நாள் ஆட்டத்தில் விக்கெட் எதையும் இழக்காமல் 66 ரன்கள் எடுத்தது. அபிநவ் முகுந்த் 52 ரன்களுடனும், சூர்யபிரகாஷ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related posts

டோனியின் ஓய்வு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்

TamilSportsNews

திரிஷாவினை வைத்து கிண்டல் செய்த அஸ்வின் மனைவி… பதறிய அஸ்வின்!

TamilSportsNews

எங்கள் விஷயத்தில் இந்தியா தலையிடக் கூடாது… பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றச் சாட்டு!!

TamilSportsNews

Leave a Comment