Cricket WorldCup 2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக மொசின் ஹசன்கான் தேர்வு

இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லையுடன் 11 புள்ளிகளுடன் 5-வது இடம் பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததால், அந்த அணி மீது நெருக்கடிக்கு ஆளானது.


2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்து வரும் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக்கின் பதவி காலம் வருகிற 31 ஆம் தேதி முடிவடைகிறது.

இன்ஜமாம் உல்-ஹக்கின்


இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்ஜமாம் உல்-ஹக் லாகூரில் நேற்று அறிவித்தார். அவர் கூறுகையில், “3 ஆண்டுகளுக்கு மேலாக தேர்வு குழு தலைவராக இருந்து விட்டேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு (2020) நடக்கிறது. அடுத்த உலக கோப்பை போட்டி (50 ஓவர்) 2023-ம் ஆண்டில் நடைபெறுகிறது. எனவே புதிய திட்டமும், சிந்தனையும் கொண்ட புதிய தேர்வு குழு தலைவரை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று நான் நம்புகிறேன்.


என்னுடன் இணைந்து பணியாற்றிய தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


தேர்வு குழுவின் புதிய தலைவராக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மொசின் ஹசன்கான் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை அணி

TamilSportsNews

உருக்கமாக பதிவிட்ட ஜடேஜா

TamilSportsNews

தோனிக்கு ஆதரவு அளித்த கங்குலி

TamilSportsNews

Leave a Comment