Cricket

தோனி ஓய்வு குறித்து மனம் திறந்த அவரது மானேஜர் மிஹிர் திவாகர்!!

தோனி சமீப காலமாக சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கேற்காத நிலையில், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றார். ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்காமல் போயிற்று.

அவருடைய பெயர் சர்வதேச ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் ஓய்வு பெறுவது குறித்த வதந்திகள் அதிகம் வெளியான வண்ணமே இருந்தன.

தோனி ஓய்வு குறித்து மனம் திறந்த அவரது மானேஜர் மிஹிர் திவாகர்!!

தற்போது தோனியின் ஓய்வு குறித்து அவரது மானேஜரும், நண்பருமான மிஹிர் திவாகர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், “உண்மையில் இவ்வளவு வருடங்களில் நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து எப்போதும் பேசியது கிடையாது. ஆனால் அவர் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.

ஐ.பி.எல். போட்டியினை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்ததைப் போல், தோனியும் எதிர்பார்த்தே இருந்தார். மீண்டும் அணியின் திரும்பும் பொருட்டு உடல் தகுதியினை சிறப்பாகவே அன்றாடம் பேணுகிறார்.

ஊரடங்குகள் முழுமையாக நீக்கப்பட்ட உடன் அவர் களம் திரும்புவதற்கான பயிற்சியில் ஈடுபடுவார். இயல்பு நிலையினை நோக்கியே அவர் காத்துக் கொண்டுள்ளார், இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் நாம் தோனியினை களத்தில் காண முடியும்” என்று கூறியுள்ளார்.

Related posts

டிம் பெய்ன் வேண்டாம்… ஸ்டீவ் ஸ்மித்தான் மீண்டும் வேணும்- ஆஸ்திரேலியா வீரர்கள் கருத்து!!

TamilSportsNews

இந்திய அணியில் மீண்டும் என்ட்ரி கொடுக்க நான் ரெடி… ஹர்பஜன்சிங் உடைத்துப் பேசிய விஷயங்கள்!!

TamilSportsNews

ராஜீவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்கு வழங்க ரெடி… ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

TamilSportsNews

Leave a Comment