Football

மரடோனாவுக்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்திய மெஸ்ஸி.. அபராதம் விதித்த கால்பந்து பெடரேஷன்!!

1980 களில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் மாரடோனா. 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர், அத்துடன் 1990 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை செல்லக் காரணமாகவும் இருந்தவர் கேப்டன் மாரடோனா.

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் சமீபத்தில் காலமாகினார். இவரது இழப்பு கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது, இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

மரடோனாவுக்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்திய மெஸ்ஸி.. அபராதம் விதித்த கால்பந்து பெடரேஷன்!!

இந்தநிலையில் ஸ்பெயினில் தற்போது நடைபெற்று வரும் லா லிகா போட்டியில் கோல் அடித்தவுடன் மெஸ்ஸி மரடோனாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சில செய்கைகளைச் செய்ய கால்பந்து அமைப்பு இவருக்கு அபராதம் விதித்துள்ளது.

அதாவது ஸ்பானிஷ் லா லிகா போட்டியில் ஒசாசுனா அணிக்கு எதிராக பார்சிலோனா அணி 0-4 என்ற கணக்கில் வெற்றி பெற, கோல் அடித்து முடித்ததும் மெஸ்ஸி தனது ஜெர்ஸியை கழற்றி கீழே போட்டுவிட்டு உள்ளே அணிந்து இருந்த மரடோனாவின் பழைய ஜெர்சியை காட்டி மரியாதை செலுத்தினார்.

போட்டி முடியும் முன்னர் ஜெர்சியை தரையில் போட்டதால் பார்சிலோனா அணிக்கு 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றது.

Related posts

லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது – பிபா தலைவர் கருத்து

TamilSportsNews

3 நாட்களுக்கு எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு சிறப்பு கால்பந்து பயிற்சி

TamilSportsNews

திணறிப்போன மும்பை… அசத்திய கோவா அணி!!!

TamilSportsNews

Leave a Comment