Tennis

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதி வாய்ப்பினைப் பெற்ற ரபேல் நடால்!!

ஏ.டி.பி. என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றினைப் பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்,

தற்போதுவரை ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதி வாய்ப்பினைப் பெற்ற ரபேல் நடால்!!

மேலுன் இன்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸுக்கு எதிராகக் களமிறங்கி விளையாடினார்.

இந்த ஆட்டத்தினைப் பொறுத்தவரையில் ரபேல் நடால் துவக்கம் முதலே மிகவும் அதிரடியாக ஆடினார், அதாவது முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டினைப் பொறுத்தவரையில் சிட்சிபாஸ் கை சற்று ஓங்கியதாக இருந்தது, அதிரடியாக செயல்பட்ட சிட்சிபாஸ் 6-4 என்ற கணக்கில் பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.

அதன்பின்னர் நடால் 6-2 என்ற செட் கணக்கில் 3 வது சுற்றினைக் கைப்பற்றினார், அதாவது ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்குள் கால் பதித்துள்ளார்.

Related posts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஒசாகா போராடி தோல்வி!!

TamilSportsNews

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியினை வெற்றியுடன் துவக்கிய நடால், ஜோகோவிச்!!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், ஜோகோவிச் 2 வது சுற்றுக்குத் தகுதி

TamilSportsNews

Leave a Comment