Tennis

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்.. நடாலைத் தொடர்ந்து அரை இறுதிக்குள் கால் பதிக்கும் ஜோகோவிச்!!

ஏ.டி.பி. என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றினைப் பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்,

இந்தப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுக்கு எதிராகக் களம் இறங்கினார். ரபேல் நடால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-2 என்ற கணக்கிலும் வென்றார், 2வது செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தார். இதன்மூலம் அரை இறுதி வாய்ப்பினைப் பெற்றார். 

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்.. நடாலைத் தொடர்ந்து அரை இறுதிக்குள் கால் பதிக்கும் ஜோகோவிச்!!

அடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச்  ஜெர்மனி அலெக்சாண்டர் ஸ்வரேவ்வுக்கு எதிராகக் களம் இறங்கினார்.

இந்த லீக் ஆட்டத்தில் ஜோகோவிச் துவக்கம் முதலே அதிரடியாக  ஆடினார். அதாவது 6-3 என்ற கணக்கில் முதல் செட்டையும், 7-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும், 7-4 என்ற செட்டில் 3 வது செட்டையும் கைப்பற்றினார்.

ஸ்வெரேவ்வை வீழ்த்தி ஜோகோவிச் அரை இறுதி வாய்ப்பினைப் பெற்றார். இன்று அரைஇறுதி ஆட்டமானது நடால் – மெத்வதேவ், ஜோகோவிச்  – டொமினிக் தீம்  ஆகியோருக்கு இடையே நடைபெறுகின்றது.

Related posts

அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்!!

TamilSportsNews

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியினை வெற்றியுடன் துவக்கிய நடால், ஜோகோவிச்!!

TamilSportsNews

காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் தங்கம் வென்ற இந்தியா

TamilSportsNews

Leave a Comment