Football

ஏடிபி டென்னிஸ்: டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மெத்வதேவ்

ஏ.டி.பி. என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றினைப் பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்,

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் மற்றும் ரஷிய வீரர் மெத்வதேவ் ஆகியோர் களம் கண்டனர்.

ஏடிபி டென்னிஸ்: டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய மெத்வதேவ்

துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதனையடுத்து இரண்டாவது செட்டில் மெத்வதேவ் மிகவும் சிறப்பாக ஆடிய நிலையில் மெத்வதேவ் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

தற்போது போட்டி சமநிலையில் இருந்தநிலையில் மூன்றாவது செட்டினை மெத்வதேவ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதன்படி இறுதியில் டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தினார். இதன்மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Related posts

பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது?

TamilSportsNews

கோரத் தாண்டவமாடும் கொரோனா… பரிதாபத்தில் இத்தாலி கால்பந்து வீரர்!!

TamilSportsNews

கோபா அமெரிக்கா கால்பந்தில் பிரேசில் பெரு அணிகள் இன்று மோதல்

TamilSportsNews

Leave a Comment