Cricket

நானும், கோலியும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்… அக்தர் பேட்டி!!

அக்தர், பாகிஸ்தானின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சொந்தமாக யுடியூப் சேனல் நடத்திவரும் அக்தர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்த வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் வீரர்கள் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

இதனால் அவ்வப்போது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பழைய நினைவுகள் குறித்து அவர் பகிர்ந்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில் தற்போது சோயப் அக்தர் விராட் கோலி குறித்து பல விஷயங்களைக் கூறியுள்ளார். அதாவது, “விராட் கோலியும், நானும் பஞ்சாப்காரர்கள். நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக சில குணங்களைக் கொண்டிருப்பதாய் நான் பலமுறை உணர்ந்துள்ளேன்.

நானும், கோலியும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்… அக்தர் பேட்டி!!

மைதானத்திற்கு வெளியே நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்போல் இருந்திருக்கிறோம். மைதானத்தில் விளையாடி இருந்தால், நான் எதிரியாக நிச்சயம் இருந்திருப்பேன். அவரது பல குணங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.

கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி அவர் மிகச் சிறந்த மனிதர் என்பதை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். அவர்மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு” என்று கூறியுள்ளார்.

Related posts

பிரித்விஷாவுக்கு அனுபவம் இல்லையா…. அப்போ இது என்ன? இந்திய கேப்டன் பேட்டி!!

TamilSportsNews

டி20 தான் ஈசிங்க… இனி இதுலதான் ஆடப் போறேன்.. ஸ்டெயின் விளக்கம்!!

TamilSportsNews

ஈகோ எல்லாம் இல்ல… எங்களுக்கு பெஸ்ட் டீம் வேணும் அவ்ளோதான்… மார்க் பவுச்சர் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

Leave a Comment