Cricket

மந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் மந்திப் சிங்கின் தந்தை அக்டோபர் 23 ஆம் தேதி இயற்கை எய்தினார். மந்திப் சிங் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நாடு திரும்பாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இறுதிச்சடங்கில் பங்கேற்றார், போட்டியில் விளையாடிய அவர் அரை சதம் விளாசி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.

இதுகுறித்து கே எல் ராகுல் உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் அவர் விளையாடிய போதும், மனவலிமையோடு விளையாடி எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். தொழில் மீதான அவரது ஈடுபாடு உண்மையில் ஒரு அதிசயமான உண்மையாகவே இருந்தது என்று கூறி இருந்தார்.

மந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அக்டோபர் 26 ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மந்தீப் சிங் 66 ரன்கள் எடுத்தது குறித்து பெங்களூரு இராயல் சேலஞ்ர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதாவது கோலி கூறுகையில், “மந்தீப் சிங் தந்தையின் மரணத்தால் கவலையுற்று இருந்தாலும், மன தைரியத்தோடு போட்டியில் பங்கேற்றார். உண்மையில் அவர் சிங்க இதயம் கொண்டவர்” என்று பாராட்டியுள்ளார்.

Related posts

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

TamilSportsNews

இன்று களமிறங்குகிறார் பும்ரா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

TamilSportsNews

பயிற்சியில் களமிறங்கிய பும்ரா… ரசிகர்கள் ஹேப்பி!!

TamilSportsNews

Leave a Comment