Cricket

விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாட எதிர்பாத்து காத்திருக்கிறேன்… ஆரோன் பிஞ்ச் பேட்டி

13 வது இந்தியன் பிரிமியர் லீக்  குறித்து ஐக்கிய அரபு எமிரேகத்தில் நடைபெறும் என்றும், மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகின.

ஐ.பி.எல். போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கோலியுடன் இணைந்து விளையாட இருப்பதை எதிர்பார்த்து ஆவலாக உள்ளேன் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் விளையாட எதிர்பாத்து காத்திருக்கிறேன்... ஆரோன் பிஞ்ச் பேட்டி

ஆரோன் பிஞ்ச் கூறியதாவது, ‘‘ஆர்.சி.பி. அணியில் விளையாட 5 மாதங்களுக்கும் மேல் காத்து இருக்கிறேன். இனி என்னால் காத்திருக்க முடியாது, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து வீரர்களும் பங்குபெரும் இந்தப் போட்டியானது ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களுக்கும் உற்சாகத்தை தரும்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் விளையாடும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காத ஒன்றாக இருக்கும். இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் கூடுதல் உற்சாகமாக இருக்கும்.

நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கோலி கேப்டன்ஷிப்பில்  விளையாடுவது குறித்து கூடுதல் உற்சாகத்தில் உள்ளேன். அவருக்கு எதிராக சர்வதேச போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள நான் அவருடன் அருகில் இருந்து விளையாடவும், கற்றுக் கொள்ளவும் ரெடியாக உள்ளேன்.  கோலி உதவி கோரினாலும் அதற்காகவும் ரெடி” என்று கூறியுள்ளார்.

Related posts

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு

TamilSportsNews

ஏன் இப்டி ஆச்சுன்னு தெரியல.. ஏலம் எடுக்காதது குறித்து ஃபீல் பண்ணிய ஹனுமா விஹாரி!!

TamilSportsNews

ஐபிஎல் நடந்திருந்தா டி20 உலகக் கோப்பைக்கு ஈசியா ரெடி ஆகியிருக்கலாம்… ஆஸ்திரேலியா பயிற்சியாளர்

TamilSportsNews

Leave a Comment