Cricket

கோலி இல்லாதது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் – இயான் சேப்பல்!

ஐபிஎல் போட்டியினை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ள நேரத்தில் அவருடன் இருக்க வேண்டும் என்பதால் கோலி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகின்றது.

கோலி இல்லாதது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் - இயான் சேப்பல்!

இந்தநிலையில் இதுகுறித்துப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், “இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியினை முடித்த அகியோடு இந்திய கேப்டன் விராட் கோலி அவரது மனைவியின் பிரசவம் காரணமாக இந்தியா திரும்புகிறார்.

இந்திய அணி அணி வீரர்களைத் தேர்வு செய்வதில் நிச்சயம் நெருக்கடி இருப்பதாக உணரும். கோலி இல்லாதது இந்திய அணியினைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் கோலி இல்லாததை இழப்பாகப் பார்க்காமல் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். வீரர்கள் தேர்வு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று இயான் சேப்பல் கூறியுள்ளார்.

Related posts

பாகிஸ்தான் அணியின் பிரபல வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!!

TamilSportsNews

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான்… இயான் சேப்பல் கருத்து!!

TamilSportsNews

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இன்று அமெரிக்கா பயணம் செய்யும் இந்திய அணி

TamilSportsNews

Leave a Comment