Cricket

84 ரன்களுக்குள் அடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. வெற்றி வாகை சூடிய ஆர்சிபி

ஐபிஎல் போட்டியின் 39 வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இந்த லீக் ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் திரிபாதி 1 ரன்னிலும், நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

அடுத்து ஷுப்மான் கில் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 4 ரன்னிலும், மோர்கன் 30 ரன்னிலும் அவுட் ஆகி தத்தளித்தது.

84 ரன்களுக்குள் அடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. வெற்றி வாகை சூடிய ஆர்சிபி

அடுத்து குல்தீப் யாதவ் – லூக்கி பெர்குசன் ஜோடி ஓரளவு நிலைத்து நின்று ஆடி 27 ரன்கள் எடுக்க கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

அடுத்து 85 ரன்கள் என்ற இலக்கினை நோக்கி ஆர்சிபி அணி சார்பில் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் 25 ரன்னிலும், பிஞ்ச் 16 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து குர்கீரத் சிங் மான் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் எடுக்க ஆர்சிபி 13.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

யுவராஜ் செஞ்ச குறும்புத்தனத்தைப் பாருங்க…!!

TamilSportsNews

இதுகூடவா தெரியாது… அநாகரீகமா நடந்துக்காதீங்க… இந்திய கேப்டன் கண்டனம்!!

TamilSportsNews

உலகின் எந்த இடத்தில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பேன்… ஸ்ரீ சாந்த் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment