Cricket

சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே கோலியின் பலம்… விக்ரம் ரதோர் சொன்ன உண்மைகள்!!

இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு வெளிநாட்டுத் தொடர்களில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். கோலி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான விக்ரம் ரதோர் சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே கோலியின் பலம் என்று கூறியுள்ளார்.

விக்ரம் ரதோர் கூறியதாவது, “கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் ஜொலிப்பதற்குக் காரணம் அவரது அர்ப்பணிப்பு தான். உலகின் மிகச் சிறந்த வீரர் என்னும் இடத்தை அடைய, அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். அவரைப் போல் கடினமான உழைக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீர்ரை நான் பார்த்ததில்லை.

மேலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே அவரது பலம் என்று சொல்லலாம். அவர் எப்போதும் ஒரே மாதிரியாக விளையாடக்கூடியவர் கிடையாது, சூழ்நிலையினை உள்நோக்கி அதற்கு ஏற்றபடி பேட்டிங்கை மாற்றி விளையாடுபவர்.

சூழ்நிலைக்கு தகுந்தபடி ஆடுவதே கோலியின் பலம்… விக்ரம் ரதோர் சொன்ன உண்மைகள்!!

மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளையும் வேறு வேறு கோணங்களில் எதிர்கொள்ளக் கூடியவர். 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 4 சதங்களுடன் 40 சிக்சர்களை அடித்தார்.

அதன்பின்னர் ஐ.பி.எல். முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் டெஸ்டில் அவர் சதம் அடித்தாலும், ஒரு சிக்சர் அடிக்கவில்லை. இவ்வாறு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவதே அவரது பலமாக உள்ளது” என்று கூறினார்.

Related posts

நான் தேர்வுக்குழு தலைவரா இருந்தா தவான் ரிஜக்டடு.. கேஎல் ராகுல் தான் செலக்டடு… ஸ்ரீகாந்த் பேட்டி!!

TamilSportsNews

தண்டனைக் காலத்திற்குப் பின்னர் கேரள ரஞ்சி அணியில் வாய்ப்பு பெறுகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த்!!

TamilSportsNews

உச்சத்தில் ரோஹித் சர்மா.. புகழாரம் சூட்டிய கோலியின் பயிற்சியாளர்!

TamilSportsNews

Leave a Comment