Cricket

இன்ஸ்டாவில் கோலி செய்த சாதனை… இப்படி ஒரு சாதனையை யாரும் செய்ததில்லையாம்!!

இந்திய அணியின் கேப்டனாக கோலி, பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வரலாறு காணாத சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், டி 20 உலகக்கோப்பைத் தொடர் உட்பட எந்தவொரு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் கேப்டன் கோலியும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இன்ஸ்டாவில் கோலி செய்த சாதனை...  இப்படி ஒரு சாதனையை யாரும் செய்ததில்லையாம்!!

கொரோனா விழிப்புணர்வு வீடியோ, வேடிக்கையான வீடியோக்கள், புகைப்படங்கள் எனப் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் இவரது சமீபத்தைய டைனோசர் விடியோ பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றது.

அதேபோல் வீட்டில் கோலி வேலை செய்யும் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் மூலம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் விராட் கோலி சம்பாதித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் இன்ஸ்டாவில் கோலி செய்த சாதனை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கோலியின் இன்ஸ்டாகிராம் அக்கௌண்ட்டை 70 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இந்தியாவில் இவ்வளவு ஃபாலோயர்கள் கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாட்கள் கவுண்டன் துவங்கியாச்சு!!

TamilSportsNews

மனஅழுத்தத்திற்கு ஆலோசனைகளை வழங்கும் திட்டம் சிறப்பானது… ரகானே பாராட்டு!!

TamilSportsNews

கோலி அவுட் ஆக காரணம் அனுஷ்கா – விளாசிய சானியா மிர்சா!

TamilSportsNews

Leave a Comment