Cricket

கோலி மற்றும் தோனி இருவரும் யுவராஜ் சிங்கின் முதுகில் குத்திவிட்டனர்… யுவராஜ் சிங்கின் தந்தை வருத்தம்!!

இந்திய அணிக்காக யுவராஜ் சிங் 304 ஒருநாள் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் 58,  40 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியுள்ளார்.

2011 உலக கோப்பை கிரிகெட் போட்டியில் யுவராஜ் சிங் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

கோலி மற்றும் தோனி  இருவரும் யுவராஜ் சிங்கின் முதுகில் குத்திவிட்டனர்… யுவராஜ் சிங்கின் தந்தை வருத்தம்!!

ஆனால் உடல்நிலை சரியாகி வந்த யுவராஜ் சிங் நீக்கப்பட்டது குறித்த தகவல்வர அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.. 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய இவருக்கு ஓய்வு பெறும்போது தக்க மரியாதையுடன் வழி அனுப்பவில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

தற்போது இதுகுறித்து யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வீரர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களின் திறமையின்படி மரியாதை கொடுக்க வேண்டும். தோனி, கோலி, ரோகித் ஓய்வு பெறும் போது சிறப்பான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும். கோலி மற்றும் தோனியுடன் சேர்ந்து தேர்வாளர்களும் யுவராஜ் சிங்கின் முதுகில் குத்திவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

Related posts

சச்சினிடம் மன்னிப்பு கேட்ட ஸ்பார்டன் நிறுவனம்… வழக்கை வாபஸ் செய்த சச்சின்!!

TamilSportsNews

சிஎஸ்கே அணி எனக்கு நெறய கற்றுக் கொடுத்தது… சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த தோனி…

TamilSportsNews

சதம் விளாசிய டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்… திணறிப் போன இந்தியா…

TamilSportsNews

Leave a Comment