Cricket

அப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும்.. ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல்ராகுல் அறிவுரை!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஜூன் மாதம் தான் தந்தையாகப் போகிறார் என்று கூறி பலருக்கும் ஷாக் கொடுத்து இருந்தார். அதாவது பாண்ட்யா  பல ஆண்டுகளாக தனது தோழியான நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடன் வாழ்ந்து வருகிறார்.

ஜனவரி மாதம் ஹர்திக் தன்னுடைய காதல் மற்றும் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது குறித்து அறிவித்தார். ஜூன் மாதம் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக கூறி வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் 31 ஆம் தேதி ஜூலை மாதம் இவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும்.. ஹர்திக் பாண்ட்யாவின் மகனுக்கு கே.எல்ராகுல் அறிவுரை!!

அதனையடுத்து நேற்று மருத்துவமனையில் டாக்டர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி, டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்து அதனையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தநிலையில் ஹர்திக் பண்ட்யாவின் நெருங்கிய நண்பரான கே.எல். ராகுல், ‘‘அப்பாவைப் போல் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்று அவனிடம் கூறுங்கள்’’ என்று பதிவிட்டு உள்ளார்.

Related posts

தோனியைப் பற்றிய உண்மைகளைப் போட்டுடைத்த மொகித் ஷர்மா

TamilSportsNews

இந்த சீசனுக்கு மட்டும்தான் ட்ரீம் லெவன் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்.. பிசிசிஐ முடிவு!!

TamilSportsNews

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள மாட்டார் ரவீந்திர ஜடேஜா!!

TamilSportsNews

Leave a Comment