Tennis

பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும்… நவோமி ஒசாகா!!

அமெரிக்காவில் கருப்பு இன நபரான ஜார்ஜ் பிளாய்ட்  என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி முழங்காலால் கழுத்தில் அழுத்தி, துடிதுடிக்க கொன்ற சம்பவம் அரங்கேறியது. கருப்பு இன நபர் தன்னை விட்டுவிடும்படி கதறிய சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் போராட்டம் வெடிப்பதைப் போல், உலகம் முழுவதிலும் உள்ள  பலர் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். அந்தவகையில் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நவோமி ஒசாகா கூறியதாவது, “பிறப்பின் அடிப்படையில் வரும் உயர்வு தாழ்வுகளைக் கருதுவோரை மனிதர்களாகக் கருதுவது கூடாது, ஏனெனில் அவர்கள் மனிதர்களுக்கான தன்மையினை இழந்துவிடுகிறார்கள்.

பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும்… நவோமி ஒசாகா!!

சில நேரங்களில் இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக அமைதியாக இருப்பது கூட துரோகச் செயல் தான். நமக்கு நடக்கவில்லை என்பதால், பொறுப்பில்லாமல் மீண்டும் அப்படி நடக்காது என்று விட்டுவிட்டால் நாம் மனிதம் மறந்த நபர்களாய்விடுவோம்.

நிறவெறிக்கு எதிராக பல தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடியும் தற்போதும் மக்களிடத்து மாற்றம் இல்லாததைக் கண்டு  மனம் கணக்கிறது, பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நவோமி ஒசாகாவின் தந்தையும், தாயும் கருப்பர் இனத்தைச்  சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

10,000 பேருக்கு இலவச உணவு… ரூ. 1.25 கோடி நிதி… களப் பணியில் சானியா மிர்சா

TamilSportsNews

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது, நடாலுக்கு 3 வது இடம்

TamilSportsNews

அதிரடியாக ஆடிய ஆஷ்லே பார்டி, ஒசாகா… 3 வது சுற்றுக்கு முன்னேற்றம்!!

TamilSportsNews

Leave a Comment