Cricket

ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போன ஜோஸ் பட்லரின் டி சர்ட்!!

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. சீனாவில் நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டாலும், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பெரிய அளவிலான உயிர் இழப்புகளை சந்தித்து வருகின்றன.

நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் அரசுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதியாக தங்களால் முடிந்த அளவு உதவி வருகின்றனர்.

அந்தவகையில் சமீபத்தில் பிரான்சின் முன்னணி கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அந்த அணி வீரர்கள் அணியும் ஜெர்சியை தயாரித்து அவர்களுடைய ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்து 2 லட்சம் யூரோக்கள் வரை திரட்டி இருந்தனர்.

ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போன ஜோஸ் பட்லரின் டி சர்ட்!!

தற்போது அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் நிதி திரட்ட  2019 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் போது தான் அணிந்திருந்த டி சர்ட்டை ஏலம் விட்டார்.

அந்த டி சர்ட் பிரபல ஆன்-லைனில் ஏலம் விடப்பட, 82 பேர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஆயிரத்தில் துவங்கிய ஏலம் ரூ.61 லட்சத்தில் முடிவடைந்தது.

இந்தத் தொகையை அவர் லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related posts

பல லட்சக்கணக்கிலான போதைப்பொருளுடன் பிடிபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!!

TamilSportsNews

நோ நோ அனுமதி கெடயாது… ஜடேஜாவுக்கு வந்த சோதனை… கங்குலி மறுப்பு!!

TamilSportsNews

தங்க மனசுக்காரங்க… அவங்களை பழி எல்லாம் வாங்க மாட்டோம்.. கோலி பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment