Cricket

காயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்!!

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது பெரும் ஆர்வத்திற்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியானது முதலில் மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் நடைபெறுகின்றது.

இந்தப் போட்டியில் செப்டம்பர் 21 ஆம் தேதி ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களம் கண்டன.  இந்த ஆட்டத்தில்  ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 10 ரன் வித்தியாசத்தில் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியின்போது ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்!!

காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியேறிய நிலையில், மீண்டும் திரும்பி காயத்தால் ஏற்பட்ட வலியுடன் பேட்டிங் செய்தார் மார்ஷ், ஆனால் அவர் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார், இந்தநிலையில் மிட்செல் மார்ஷ் காயம் தீவிரமாக இருப்பதால், அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் விளையாடுவார் என ஐதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

டோனிக்கான மாற்று வீரரை உருவாக்க சில காலம் பிடிக்கும் – யுவராஜ் சிங்

TamilSportsNews

வெச்சு செஞ்ச பெண்கள் அணி.. அடிச்சு தூள் கிளப்பியாச்சு இல்ல!!

TamilSportsNews

பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க புல் திண்ணவும் ரெடி.. அக்தர்

TamilSportsNews

Leave a Comment