Tennis

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் தோல்வி, ஜோகோவிச் வெற்றி!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியானது தற்போது ரோமில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியினைப் பொறுத்தவரை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் கால் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது, அந்த கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தோல்வியைத் தழுவி பெரும் அதிர்ச்சியினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் தோல்வி, ஜோகோவிச் வெற்றி!!

அதாவது நடால் ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்பெருக்கு எதிராகக் களம் இறங்கினார். அதாவது துவக்கம் முதலே தடுமாறிய நடால் இரண்டு செட்டையும் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் இழந்தார், உண்மையில் இந்தத் தோல்வியானது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்றைய அரைஇறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் நார்வே வீரர் கேஸ்பர் ருட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மேலும் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரைஇறுதி ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஸ்பெயின் வீராங்கனை முகுருருஜாவை 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார், மேலும் அதன்மூலம் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தார்.

Related posts

அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக ஸ்பெயினின் ரபெல் நடால் அறிவிப்பு!!

TamilSportsNews

விம்பிள்டன் டென்னிஸில் செரீனாவை வீழ்த்திய ஹாலெப்

TamilSportsNews

கோலி மற்றும் சானியா மிர்சாவுக்கு சவால் விடுத்த பிவி சிந்து!!

TamilSportsNews

Leave a Comment