Tennis

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோப்பையை வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச்!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியானது தற்போது ரோமில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியினைப் பொறுத்தவரை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது,

இந்த இறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் அர்ஜென்டினா வீரர்  டியாகோ ஸ்வாட்ஸ்மனுக்கு எதிராகக் களம் இறங்கினார். மிகவும் விறுவிறுப்பாக இந்த ஆட்டமானது நடைபெற்றது.

முதல் செட்டில் ஜோகோவிச் மற்றும் டியாகோ இருவரும் மாறி மாறி அதிரடியாக செயல்பட்டனர், இறுதியில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார், அடுத்து இரண்டாவது செட்டினை 6-3 என்ற நேர்செட்டில் கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோப்பையை வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச்!!

இறுதியில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அதேபோல் பெண்களுக்கு இறுதி போட்டி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் மோதினார்.

மேலும் 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த பிளிஸ்கோவா இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஹாலெப் இத்தாலி ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Related posts

பிரேசில் டென்னீஸ் வீரருக்கு கொரோனா… தன்னம்பிக்கையோடு போட்ட ட்வீட்!!

TamilSportsNews

அமெரிக்க ஓப்பன் டென்னீஸைத் தொடர்ந்து பிரெஞ்ச் ஓப்பன் டென்னீஸில் இருந்தும் விலகிய ஆஷ்லி பார்டி!!

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ் குறித்து ஜூன் மாத இறுதிக்குள் முடிவு எடுத்துடுவோம்… தலைமை நிர்வாகி பேச்சு!!

TamilSportsNews

Leave a Comment