Cricket

சூர்யகுமார் யாதவை சேர்க்காமல் போனது ஏமாற்றமாக உள்ளது.. லாரா பேட்டி!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வீரர் சூர்யகுமார் யாதவ், இந்த 13 வது ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரை 12 போட்டிகளில் சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலு சேர்த்து வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.  சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டி மட்டுமின்றி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்புமிகு சாதனைகளைச் செய்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் போட்டிக்குப் பின்னர் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சூர்ய குமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கருத்து தெரிவித்திருந்த நிலையிலும் சூர்யகுமார் யாதவ் பெயர் இந்தியா- ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூர்யகுமார் யாதவை சேர்க்காமல் போனது ஏமாற்றமாக உள்ளது.. லாரா பேட்டி!!

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில், “சூர்யகுமார் யாதவ் பல முறை நெருக்கடியான தருணத்தை மிகச் சரியாக கையாண்டு இருக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் அவர் இடம்பெறாமல் போனது உண்மையில் ஏமாற்றம் அளிக்கும் விஷயமே” என்று கூறியுள்ளார்.

Related posts

சிஎஸ்கே அணியில் 2 வதாக ஒரு வீரருக்கு கொரோனா உறுதி.. ரசிகர்கள் சோகம்!!

TamilSportsNews

எதிர்பார்க்கல இல்ல… பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ்..!

TamilSportsNews

டி வில்லியர்ஸ் மனித சக்திக்க அப்பாற்பட்டவர்.. விராட் கோலி பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment