Football

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய சென்னை அணி!!

7 வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் தற்போது கோவாவில் நடைபெற்று வருகின்றது. அதாவது இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 10 அணிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு அணி கூடுதலாகச் சேர்க்கப்பட்டு 11 அணிகளாக உருவாகியுள்ளது.

இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும் போட்டியானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவாவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய சென்னை அணி!!

நேற்றைய 5 வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் களம் கண்டன. போட்டி துவங்கிய முதல் நிமிடத்தில் சென்னை அணி கோல் போட்டது.

அதாவது இஸ்மா கடத்திய பந்தை வீரர் அனிருத் தபா கோல் ஆக்கினார்.  அதன்பின்னர் 25 வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சாங்டேவை, ஜாம்ஷெட்பூர் வீரர் ஐசக் கீழே தள்ளிவிட, சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை அணி வீரர் இஸ்மா ஒரு கோல் போட சென்னை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் வகித்தது.

அடுத்து ஜாம்ஷெட்பூர் அணி வெறித்தனமாக ஆடிய நிலையில் ஜாம்ஷெட்பூர் வீரர் வல்ஸ்கிஸ் ஒரு கோல் போட்டார். இரண்டு அணி வீரர்களும் வெறித்தனமாக விளையாடிய நிலையில், சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Related posts

மறைந்தது சகாப்தம்…கால்பந்து வீரரும், கிரிக்கெட் வீரருமான சுனி கோஸ்வாமி காலமானார்!!

TamilSportsNews

முதல் முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து

TamilSportsNews

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்.. 3 நாட்கள் துக்கம் கடைபிடிப்பு!!

TamilSportsNews

Leave a Comment