Cricket

ஐ.பி.எல் கிரிக்கெட் 2 வது நாள் ஆட்டம்: களம் காண ரெடியான டெல்லி – பஞ்சாப் அணிகள்

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது நேற்று துவங்கியது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதல் வெற்றியினைப் பெற்றது.

இன்று நடைபெறவுள்ள 2 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் களம் காண்கின்றன.

டெல்லி அணி இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று மிகவும் கடுமையான முறையில் தயாராகியுள்ளது,

ஐ.பி.எல் கிரிக்கெட் 2 வது நாள் ஆட்டம்: களம் காண ரெடியான டெல்லி - பஞ்சாப் அணிகள்

ஆனால் ரஹானேவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமே என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் கூறும்போது, “ரஹானேவின் பேட்டிங்க் இந்த முறை நிச்சயம் கடும் சவாலாக இருக்கும், மேலும் ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்பு கடந்த ஆண்டைவிட அதிகமாகவே உள்ளது.

துபாய் ஆடுகளத்தில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும், இது சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கும்” என்றார்.

பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, “சிறப்பான அளவில் இளமையான வீரர்களையும், அனுபவம் கொண்ட வீரர்களையும் கொண்ட சிறப்பான கலவையாக உள்ளோம். இந்த சீசனை ரசிகர்கள் மறக்க முடியாததாக மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

Related posts

இந்தியாவை ஜெயிக்கறது சாதாரண விஷயமல்ல… சீனியர் வீரர்கள் சப்போர்ட் பண்ணுங்க.. குசால் பெரேரா வேண்டுகோள்!!

TamilSportsNews

3 பேரும் வலுவானவர்களே… அவர்களைப் பத்தி பேசாதீங்க… கண்டிஷன் போட்ட கோலி

TamilSportsNews

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியினைப் பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

TamilSportsNews

Leave a Comment