Cricket

தோனியை அதிரடி ஜாம்பவான் என்று புகழ்ந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!!

ஐசிசி ஒருநாள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் கோப்பை என முக்கிய போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர் தோனி.  இன்றுவரை இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக தோனி செயல்பட்டு வருகின்றார். அவரின் விக்கெட் கீப்பிங் திறமை வேறு எந்த வீரருக்கும் இல்லாதது தோனிக்கு கிடைத்த பெருமை.

நேற்று முன் தினம் தனது 39 ஆவது பிறந்த நாளை மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார் தோனி. பலரும் தோனிக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

தோனியை அதிரடி ஜாம்பவான் என்று புகழ்ந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி!!

சச்சின் ட்விட்டரில், “டோனி உடல் ஆரோக்கியத்துடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்”என்று பதிவிட்டார். அவரை அடுத்து இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலியும் தனது வாழ்த்தினைப் பதிவிட்டு இருந்தார்.

அவரை அடுத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இளம் வீரர், அதிரடி ஜாம்பவான் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டு புகழாரம் சூட்டினார். பிறந்தநாள் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில், தல தோனி ரசிகர்கள் அந்த ட்வீட்டுகளை வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

முதல் சம்பளம் ரூ.3000 ரூபாய்… ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன முன்னணி வேகப்பந்து வீச்சாளர்!!

TamilSportsNews

பாகிஸ்தான் செய்தது அநியாயம்… கடுப்பாகிப் போன கவுதம் கம்பீர்!!

TamilSportsNews

டைட்டானிக் ஹீரோயின் ஆன சாஸ்திரி… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

TamilSportsNews

Leave a Comment