Football

மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட இந்திய கால்பந்து லீக் போட்டிகள்!!

சீனாவினைப் பெருமளவில் பாதித்த கொரோனா வைரஸ் தற்போது, மற்ற நாடுகளிலும் பெரிய அளவில் உயிர் சேதத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் 40 ஆக இருந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 70 ஐக் கடந்துள்ளது. இதனால் இந்திய அரசாங்கம் மேலும் பரவாமல் இருக்க பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸால் உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட இந்திய கால்பந்து லீக் போட்டிகள்!!

தற்போது, இந்தியாவில் நடைபெற உள்ள கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து அறிவிக்கப்பட்டதாவது, “கொரோனா அச்சுறுத்தல் உலகினை உலுக்கி வரும் நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று, இந்தியாவில் நடைபெற இருந்த இந்திய கால்பந்து லீக் போட்டிகளை ஒத்தி வைக்கிறது. இந்தப் போட்டிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

Related posts

ஒரே ஒரு கோல்.. சுனில் சேத்ரியால் வெற்றி பெற்ற பெங்களூரு!!

TamilSportsNews

கோபா அமெரிக்கா கால்பந்தில் உருகுவே–ஜப்பான் ஆட்டம் 2 முறை ‘ட்ரா’

TamilSportsNews

விறுவிறுப்பான ஆட்டம்…. போராடி வென்ற நார்த் ஈஸ்ட் அணி… !

TamilSportsNews

Leave a Comment