Cricket WorldCup 2019

இங்கிலாந்து அணியின் அலும்பல் தாங்கல… வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்

உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது முதல் இப்போது வரை சர்ச்சைகள் கிளம்பிய வண்ணமே உள்ளன. 1.2 பில்லியன் மக்கள்தொகை உடைய இந்திய நாடு தோற்று போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது? என 2016ம் ஆண்டு மோர்கன் பதிவிட்டிருந்தார்.

அப்போது இந்திய அணியின் முன்னாள் வீர்ர் சேவாக், “கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது அவமானம் இல்லையா” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இங்கிலாந்து அணியின் அலும்பல் தாங்கல… வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்

உலக கோப்பையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேவாக்கின் இந்த பழைய ட்வீட்டை தேடி கண்டு பிடித்து ஹாய் நண்பா என்று தமது டுவீட்டை தொடங்கி இருக்கிறார். அதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல என்று கிண்டல் செய்து மோர்கனை ட்விட்டரில் வெச்சு செய்தனர். 

நியூசி. இங்கிலாந்து இடையே நடந்த உலக கோப்பை இறுதியில் இங்கிலாந்து முதல் முறையாக வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தின் 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவானது. 

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரியை எந்த அணி அடித்தது என்று கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அதிகமாக பவுண்டரிகள் எடுத்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன. 

Related posts

பாகிஸ்தான் கேப்டனை விமர்சிக்கும் ஷோயப் அக்தர்

TamilSportsNews

பங்களாதேஷ் vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

TamilSportsNews

இவங்க தான் அரையிறுதிக்கு போவாங்க மைக்கேல் வாகன்

TamilSportsNews

Leave a Comment