Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மா- சுரேஷ் ரெய்னா பேட்டி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மா என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா கூறுகையில், “தோனி மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை கேட்கக்கூடியவர். மேலும் இளம் வீரர்களுக்கு ஆதரவு வழங்குபவர், கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளைக் குவிப்பவர். போட்டிகளின் வெற்றிகளை மட்டுமல்லாது வீரர்களின் ஓய்வறை குறித்தும் கவனம் செலுத்துபவர்.

அவர் அணி வீரர்கள் அனைவரையும் கேப்டனாக நினைத்து செயல்படுவார். அவர் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு மிகச் சிறப்பான அளவில் நம்பிக்கை அளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மா- சுரேஷ் ரெய்னா பேட்டி!!

அடுத்த தோனி என்று சொல்லும் அளவு இந்திய அணியில் உள்ள ஒரு வீரரின் செயல்பாடும் இருக்கும். அவர் ரோகித் சர்மா அவர்கள்தான். தோனியைவிட அதிக ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள ரோகித்தின் கேப்டன்ஷிப் தோனியைப் போன்றதாகவே இருக்கும்.

அதேபோல் அணி வீரர்களின் மதிப்பளிக்கும் தன்மை ரோகித் சர்மாவிடமும் நிறைந்து காணப்படும்.  வீரர்களுக்கு போதுமான ஆதரவினை வழங்கும் இருவரும் அற்புதமான கேப்டன்கள். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி ரோகித் சர்மா அவர்கள்தான் என்றே நான் நினைப்பேன்” என்று ரெய்னா கூறியுள்ளார்.

Related posts

ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்குகிறது இங்கிலாந்து- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்!!

TamilSportsNews

யாருப்பா இந்தப் பையன்… பாராட்டித் தள்ளிய இந்திய அணி வீரர்கள்!!!

TamilSportsNews

இரட்டை சதத்தினை விளாசிய மயங்க் அகர்வால்… ஆடிப்போன தென் ஆப்ரிக்கா!!

TamilSportsNews

Leave a Comment