Cricket

ஐபிஎல் போட்டியால் ரூ.4000 கோடி வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!!

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது பெரும் ஆர்வத்திற்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியானது முதலில் மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் நடைபெற்றது.

இந்த ஐபிஎல் போட்டியினைக் காண ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி கிடைக்காததால், தொலைக்காட்சியில் பேராவலுடன் பார்த்தனர்.

முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் மூலம் மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறி இருந்தார்.

ஐபிஎல் போட்டியால் ரூ.4000 கோடி வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!!

அதாவது இந்த சீசனில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் பார்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு 2020  ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 2400 கோடி விளம்பர வருவாய் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் ஐபிஎல் போட்டியால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதாவது அவர் கூறுகையில், “தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியம் இந்த 13 வது சீசனில் ரூ.4,000 கோடி பணம் ஈட்டியுள்ளது.” என்று கூறியுள்ளார்.

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார்..!!

TamilSportsNews

பழக்க தோஷத்தில் செய்து விட்டேன் இங்கிலாந்து வீரர் டாம் சிப்லி விளக்கம்.. எச்சரித்த நடுவர்!!

TamilSportsNews

வரலாற்றை திருப்பிப் பாருங்க பாஸ்… கேள்விகளுக்கு பதிலடி கொடுத்த வெயின் பிராவோ

TamilSportsNews

Leave a Comment