Other Sports

கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து விலகிய இந்தியா

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவில் 2700 பேர் உயிர் இழந்துள்ளநிலையில், சீனாவைத் தாண்டி இத்தாலி, ஜப்பான், சிரியா, அமெரிக்கா என பல நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஐ.நாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் உலக நாடுகளுக்கு இடையேயான பல்வேறு வகையான போட்டிகளை தவிர்த்தல் கொரோனோ வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது.

அதானால் பல்வேறு நாடுகளும் தற்போது நடைபெறவிருக்கிற விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் ரத்து செய்து வருகிறது.

கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு வந்த சோதனை.. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து விலகிய இந்தியா

அந்த வகையில் இந்திய அரசு உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, அதாவது கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் நாட்டில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் 13 ஆம் தேதி வரை சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக கோப்பையில் இருந்து விலகுவதாக இந்திய தேசிய ரைபிள் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

Related posts

அடிச்சு புடிச்சு ஜெயிச்சாச்சு.. காலிறுதிக்குள் ஜோஸ்னா, சவுரவ் கோஷல்!!

TamilSportsNews

நெருக்கடியில் சிந்து… அடுத்த முறை வெற்றிபெற்றே ஆகணும்!!

TamilSportsNews

விமர்சனங்களைக் கடந்துவிட்டேன்.. ஒலிம்பிக்கிற்கு ரெடி ஆகி வருகிறேன்!!

TamilSportsNews

Leave a Comment