Cricket

இந்தியா- பாகிஸ்தான் மேட்ச் நடத்தி நிதி திரட்டலாம்… அக்தர் யோசனை!!

கொரோனா வைரஸ் உலகினை அச்சுறுத்தி வருகிற நிலையில், இந்தப் போராட்டத்தில் வெற்றி காண பல நாடுகளும் தங்களால் இயன்ற அளவு நிதி திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போட்டி நடத்தி பெரிய அளவில் நிதி திரட்டலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பில் இருந்து மீள பல வகைகளில் அனைத்து நாடுகளும் நிதி திரட்டி வருகின்றன. இந்த மோசமான சூழலில், நிதி திரட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும்.

இந்த போட்டிகள் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும், இது நடத்தப்படும் நோக்கமானது நிதி திரட்டுவதற்காக் என்பதால் முடிவு என்னவாக இருந்தாலும் யாரும் வருத்தமோ கோபமோ கொள்ள மாட்டார்கள்.

இந்தியா- பாகிஸ்தான் மேட்ச் நடத்தி நிதி திரட்டலாம்… அக்தர் யோசனை!!

கோலி சதம் அடித்தாலும் சரி, பாபர் அசாம் சதம் அடித்தாலும் சரி அனைத்துமே மகிழ்ச்சியாகவே இருக்கும். யார் ஜெயித்தால் வெற்றி பெற்றது நாம் அனைவருமே ஆவோம்.

இதன் மூலம் திரட்டிய நிதியை, இந்தியா- பாகிஸ்தான் நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க நாம் பயன்படுத்தலாம்.

மக்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பூட்டிய மைதானத்தில், தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த போட்டியை நடத்தலாம்.

இதன்மூலம் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்க வாய்ப்புண்டு. இரு நாட்டு உறவில் உள்ள சிக்கல்கள் குறைய வாய்ப்புள்ளது” என்று அக்தர் கூறினார்.

Related posts

கோலியை அவுட் ஆக்கணும்.. இதுதான் எய்ம்… டிரென்ட் போல்ட் பேட்டி!!

TamilSportsNews

விராட் கோலிக்கு புகழாரம் … பாராட்டித் தள்ளிய பாகிஸ்தான் வீரர்!!

TamilSportsNews

எங்கள் விஷயத்தில் இந்தியா தலையிடக் கூடாது… பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குற்றச் சாட்டு!!

TamilSportsNews

Leave a Comment