Cricket

எப்படியாவது ஜெயிச்சுட்டு வாங்க… இல்லன்னா அட்வைஸ் பண்ணியே சாகடுச்சிடுவாங்க… ரசிகர்கள் கமெண்ட்!!

நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் படுதோல்வி பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2 வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் கடந்த 3 நாட்களாக தயாராகி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இதுகுறித்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், முன்னாள் முன்னணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் இந்திய அணிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

எப்படியாவது ஜெயிச்சுட்டு வாங்க… இல்லன்னா அட்வைஸ் பண்ணியே சாகடுச்சிடுவாங்க… ரசிகர்கள் கமெண்ட்!!

திட்டமிடுதல், கேப்டன்ஷிப், பந்து வீச்சு, பேட்டிங்க் என அனைத்து வகையிலும் விமர்சித்து முடித்து விட்டனர். முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் ரன்களைக் குவித்திருக்கலாம், இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட இந்திய அணி எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

மயங்க் அகர்வால், ரஹானே தவிர மற்றவர்கள் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதுவரை ஆடும் லெவன் அணி குறித்த வீரர்கள் விவரம் வெளியாகாத நிலையில், துவக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் காரணமாக சுப்மான் கில் இடம் பெறுவார் என்றும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்றும் தெரிகிறது.

இந்திய அணி ரசிகர்களோ தயவு செஞ்சு எப்படியாச்சும் ஜெயிச்சுட்டு வாங்க, இல்லன்னா எல்லாரும் அட்வைஸ் பண்ணியே சாகடுச்சிடுவாங்க என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Related posts

அய்யோ போச்சே… கப்பு போச்சே.. 165 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!!

TamilSportsNews

ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல… 15 முதல் 20 வீரர்கள் செம பார்ம்ல இருக்காங்க… சொல்கிறார் ரோகித் சர்மா!!

TamilSportsNews

ரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்குங்க… பெஸ்ட் பினிஷிங்க் இருக்கும்.. இர்பான் பதான் பேட்டி

TamilSportsNews

Leave a Comment