Cricket

எப்படியாச்சும் 400 ரன் எடுத்துருங்க.. பதிலடி கொடுத்தே ஆகணும்.. வேற வழியே இல்ல.. வாசிம் ஜாபர் பேட்டி!!

நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கி  உள்ளது.

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் படுதோல்வி பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2 வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் கடந்த 3 நாட்களாக தயாராகினர்.

கிறிஸ்ட்சர்ச்சில் இன்றைய ஆட்டத்தில் 400 ரன்கள் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

எப்படியாச்சும் 400 ரன் எடுத்துருங்க.. பதிலடி கொடுத்தே ஆகணும்.. வேற வழியே இல்ல.. வாசிம் ஜாபர் பேட்டி!!

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘‘இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் பட்சத்தில், அடுத்த ஆட்டத்திலேயே வலுவான அணியாக மீண்டு எழும் தன்மை கொண்டதாக இருந்து வருகிறது.

கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் பட்சத்தில், அடுத்த ஆட்டத்தில் வெறித்தனமாக வேட்டையாடுவார். புஜாராவும் இந்த ஆட்டத்தில் ரன் வேட்டை நடத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்திய அணியின் இலக்கு 400 ரன்களாக இருக்கும்பட்சத்தில், நியூசிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும்.

மிகவும் சவாலான இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன்மூலமே இந்திய அணி வலுவான என்பதை நிரூபிக்க முடியும்.  இந்திய அணியின் இந்த வெற்றியானது உலகக்கோப்பை வெற்றிபோல் பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Related posts

காஞ்சி வீரன்ஸ் அணியிடம் தோல்வியுற்ற மதுரை அணி!

TamilSportsNews

பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலர்… புகழ்ந்து தள்ளிய ரோகித்!!

TamilSportsNews

தவான் ஓய்வு… தவானுக்கு பதில் இவர்தான் ஆடப் போறார்!!

TamilSportsNews

Leave a Comment