Cricket

என்ன சொல்லி என்ன புண்ணியம்… 242 ரன்களில் படுத்துட்டாங்க.. 3 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றதுடன், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்க் செய்தது.

இந்திய அணியினைப் பொறுத்தவரை துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா களம் இறங்கினர். முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்று நினைக்கையில், ஷாக் கொடுக்கும் வகையில் மயங்க் 7 ரன்களில் அவுட் ஆகிப் போனார்.

என்ன சொல்லி என்ன புண்ணியம்… 242 ரன்களில் படுத்துட்டாங்க.. 3 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்!!!

பிரித்வி ஷா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி, அரை சதத்தினைக் கடந்தார். அடுத்து புஜாரா முதல் டெஸ்ட்டில் சிறப்பாக ஆடியதைப் போலவே இந்த ஆட்டத்திலும் ஆடினார்.

சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த அவர் அரை சதத்தினைக் கடந்தார். புஜாரா-  பிரித்வி ஷா ஜோடி 54 ரன்களில் அவுட் ஆகியது.

அடுத்து வந்த இந்திய அணி வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதாவது ரிஷப் பண்ட் 12 ரன்களும், ஜடேஜா 9 ரன்களும், உமேஷ் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோலி 3 ரன்களில் அவுட் ஆக, ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். அடுத்துவந்த ரகானேவும் 7 ரன்களில் அவுட் ஆனார்.

நிதானமாக ஆடிய விகாரி, அரை சதத்தினைக் கடந்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆகினார், ஷமி 16 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் ஆல்- அவுட் ஆகி உள்ளது.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் காதிர் மறைவிற்கு சச்சின் இரங்கல்

TamilSportsNews

வாரே வா… 16 வயசு வீரருக்கு ஆட்ட நாயகன் விருது.. குதூகலத்தில் பாகிஸ்தான் அணி.!!

TamilSportsNews

இப்படியும் ஒரு மோசமான ஆட்டமா?.. எதிரணியை களங்கடித்த நேபாள வீராங்கனை!!

TamilSportsNews

Leave a Comment