Cricket

இந்தியா – இங்கிலாந்து போட்டி பகல்-இரவு போட்டிதான்.. கங்குலி பேட்டி!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் போட்டியானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், “இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியினை கொரோனா அச்சுறுத்தலுக்கு நடத்த உள்ளதால் குறிப்பிட்ட மைதானங்களில் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தியா - இங்கிலாந்து போட்டி பகல்-இரவு போட்டிதான்.. கங்குலி பேட்டி!!

மேலும் தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் போட்டியினை முடித்த பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது, அந்த ஆஸ்திரேலிய தொடருக்கான அணியானது தேர்வு செய்யப்படுவதற்கான செயல்முறைகள் செயலில் உள்ளன.

அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி, ரஞ்சிக் கிரிக்கெட் போட்டி குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்படும், இந்தியா- இங்கிலாந்து போட்டியானது பகல்- இரவுப் போட்டியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தில் இவை குறித்த விஷயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று கங்குலி கூறியுள்ளார்.

Related posts

பயிற்சியாளர்களுக்கு வாய்ப்புகள் வேணும்… கன்சிடர் பண்ணுங்க.. ராகுல் டிராவிட் வேண்டுகோள்!!

TamilSportsNews

தேர்வுக் குழுவில் மாற்றம்… அதிரடித்த கங்குலி!!!

TamilSportsNews

174 ரன்கள் எடுத்து அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!!

TamilSportsNews

Leave a Comment