Cricket

ஆஸ்திரேலிய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. அதன்படி கேப்டன் விராட் கோலி 63 ரன்களில் அவுட் ஆக, ஹர்திக் பாண்ட்யா 92 ரன்களிலும், ஜடேஜா 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்படி 303 ரன்கள் தேவை என்ற இலக்கினை நோக்கி ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆரோன் பிஞ்ச் மற்றும் லாபஸ்சேன் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஆஸ்திரேலிய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!!

அதன்படி லாபஸ்சேன் க்ளீன் போல்டாகினார். சொதப்பலாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 6 ஓவருக்குள் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது.

அடுத்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடியநிலையில் 75 ரன்களில் அவுட் ஆகினார்.  அதனையடுத்து ஹென்ரிக்ஸ் 22 ரன்களிலும், க்ரீன் 21 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் சிறப்பாக ஆடிய நிலையில். அலேக்ஸ் கேரி 38 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து மேக்ஸ்வெல் 59 ரன்களில் அவுட் ஆக, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 289 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது… புலம்பிய ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை!!

TamilSportsNews

டையில் முடிந்த ஆட்டம்… சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!!!

TamilSportsNews

கொரோனா தற்காப்பு… வீரர்களுக்கு பிசிசிஐ விதித்துள்ள விதிமுறைகள்!!

TamilSportsNews

Leave a Comment