13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இந்தப் போட்டியானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதாவது இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியானது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் என மூன்று வகையான ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.

அதாவது நவம்பர் 11 ஆம் தேதி துபாயில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னர் நவம்பர் 12 ஆம் தேதி துவங்கி இந்திய வீரர்கள் சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகின்றது.
காயம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இஷாந்த் சர்மா தற்போது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.