Cricket

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தால் விளையாடுங்க.. தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து!!

தோனி 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் களம் இறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது.

தோனி ஓய்வு குறித்த விஷயங்கள் கடந்த ஒரு வருட காலமாகவே டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. அந்தவகையில் தற்போது தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தால் விளையாடுங்க.. தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து!!

அவர் கூறுகையில், “வயது என்பது ஒரு எண்ணைத் தவிர வேறு எதுவும் இல்லை, உண்மையில் நீங்கள் சிறப்பான பார்மில் இருந்தால் இந்திய அணிக்காக விளையாட முடியும் என நினைத்தால்,  உங்களுக்கு அணியில் தொடர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்பட்சத்தில் களம் இறங்கி விளையாடலாம். 

அதுபோன்ற பாசிட்டிவான முடிவினை ரசிகர்கள் வரவேற்கவே செய்வர்.  அவருக்கு சிறப்பான வலுவான உடல் தகுதியும், சிறப்பான ஆட்டத்திறனுடனும் இருக்கும்பட்சத்தில் யாரும் அவரை ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.

ஓய்வு குறித்து மற்றவர்கள் கூறும் நெருக்கடி தரும் விஷயங்களை கருத்தில் கொள்ளக் கூடாது.  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவானது உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும். அதனால் உங்களுக்கு களம் இறங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதிர்மறையான கருத்துகளில் கவனம் செலுத்தாதீர்கள்.” என்று கம்பீர் கூறினார்.

Related posts

டி 20 பத்தி எல்லாம் நினைக்கல.. இப்போ ஹேப்பி அண்ணாச்சி… கேஎல் ராகுல் மகிழ்ச்சி!

TamilSportsNews

இந்தியா புறப்பட்ட இலங்கை அணி வீரர்கள்.. வெளியானது இலங்கை அணி வீரர்கள் விவரம்!!

TamilSportsNews

ஐபிஎல் போட்டி ஓய்வு குறித்து ஹர்பஜன் சிங்கின் பதில்!!

TamilSportsNews

Leave a Comment