Cricket

டெஸ்ட் கிரிக்கெட் விதியை மாற்றினால் பெயரையும் ஈசி கிரிக்கெட்டுன்னு மாற்றுங்க… பென் ஸ்டோக்ஸ் கருத்து!!

டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம் ஆன பின்னர் ரசிகர்கள் டி 20 மீது காட்டும் ஆர்வம் அதிகமானது, மேலும் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் குறைந்து போயினர்.

அதேபோல் வீரர்களும் நிலைத்து நின்று ஆடாமல் அதிரடியாக ஆடி 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியினை 4 நாட்களுக்குள் முடித்து விடுகின்றனர். ரசிகர்களின் கவனத்தினை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியினை நோக்கி கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசித்து வருகிறது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தநிலையில், பென் ஸ்டோக்ஸ் தனது கருத்தினைக் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் விதியை மாற்றினால் பெயரையும் ஈசி கிரிக்கெட்டுன்னு மாற்றுங்க… பென் ஸ்டோக்ஸ் கருத்து!!

பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது, ‘‘டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி 20 என மூன்றுவகையான கிரிக்கெட் போட்டிகள் உள்ள நிலையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டே சிறந்த போட்டியாகும். ஆனால் தற்போது ரசிகர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி, ஜோ ரூட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களிடம் கேட்டுப் பார்த்தால் உங்களுக்கே புரியும். டெஸ்ட் கிரிக்கெட்டின் விதிமுறையில் மாற்றம் கொண்டுவருவதைவிட மோசமான விஷயம் ஏதும் இல்லை.

விதிமுறைகளை மாற்றப்பட்டால், இதனை பெயரையும் மாற்றி ஈசி கிரிக்கெட் என அழைத்தால் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Related posts

ரோகித் சர்மாவுக்கு காயம்.. விளையாடுவது சந்தேகம்தான்.. சோ துவக்க வீரர் பிரச்சினை ஓவர்!!

TamilSportsNews

அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி.. பழி தீர்க்குமா இங்கிலாந்து!!

TamilSportsNews

இவர்களை நம்பித்தான் களமிறங்குகிறோம்… மனம் திறந்த ரஹானே!!

TamilSportsNews

Leave a Comment