Cricket

தோனி விளையாட நினைத்தால் அவரை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.. நெஹ்ரா பேட்டி!!

தோனி சமீப காலமாக சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கேற்காத நிலையில், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றார். அவருடைய பெயர் சர்வதேச ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் ஓய்வு பெறுவது குறித்த வதந்திகள் அதிகம் வெளியான வண்ணமே இருந்தன.

இந்தநிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா தோனி விளையாட நினைத்தால், அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அவரை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

தோனி விளையாட நினைத்தால் அவரை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.. நெஹ்ரா பேட்டி!!

ஆஷிஷ் நெஹரா கூறுகையில், “தோனி ரசிகர்கள் இந்திய அணிக்காக தோனி எப்போது களம் இறங்குவார் என்றும் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் தோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். தோனி மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அவர் கூற வேண்டும்.

ஐ.பி.எல். தொடரில் அவர் நிரூபித்தால், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் வதந்தியே, இவை இரண்டிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. தோனி எவ்வளவு நாட்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்தாலும் அவரின் ஆட்டத்திறன் சிறப்பாகவே இருக்கும்.

தோனி விளையாட நினைத்தால், அவர் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அவரை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள்.”  என்று நெஹரா கூறியுள்ளார்.

Related posts

10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

TamilSportsNews

கொரோனா பத்தி கவலை வேண்டாம்… ஐபிஎல் நிச்சயம் நடக்கும்.. பிசிசிஐ அறிவிப்பு!!

TamilSportsNews

ரபடாவுக்கு அபராதம்… சந்தோஷப்பட்டது குத்தமா?… முன்னாள் கேப்டன் கேள்வி!!

TamilSportsNews

Leave a Comment