Cricket

தோனி சிறப்பாக செயல்படவில்லையெனில் இந்திய அணி கதவுகளை அடைத்துவிடும்.. டீன் ஜோன்ஸ் கருத்து!!

தோனி சிறப்பாக செயல்படவில்லையெனில் இந்திய அணி கதவுகளை அடைத்துவிடும்..  டீன் ஜோன்ஸ் கருத்து!!

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தோல்வியுற்ற பின்னர், எந்தவொரு சர்வதேச தொடரிலும் பங்கேற்கவில்லை. மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் தோனி தனது திறமையினை நிரூபித்து மீண்டும் சர்வதேச அணிக்குள் கால் பதிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

கடந்தமாதம் ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே வீரர்களுடன் தோனி பயிற்சியினைத் துவக்கிய நிலையில், கொரோனா காரணமாக தற்போது இந்தியா முழுவதும் எந்தவொரு போட்டிகளும், நிகழ்வுகளும் நடைபெறாத நிலையில் வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர்.

தோனி சிறப்பாக செயல்படவில்லையெனில் இந்திய அணி கதவுகளை அடைத்துவிடும்..  டீன் ஜோன்ஸ் கருத்து!!

தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டியானடு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல்  நடத்த உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் தோனி களம் இறங்குவதைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடினால், அவரை இந்திய அணி முன்னிலைப்படுத்தும் என முன்னாள் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “ஐபிஎல் போட்டி தோனிக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு.  அவர் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி அவரை நிச்சயம் முன்னிலைப்பட்டுத்தும். இல்லையெனில் கதவுகளை அடைத்துவிடும் என்பது அறிந்த விஷயமே. தோனி தனக்கு கிடைத்த நல்ல இடைவேளையினை சரியாகப் பயன்படுத்தி மீண்டும் வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts

2 வருடங்களாக சூதாட்டத்தில் ஈடுபாடு… மறைத்தது ஏன்?

TamilSportsNews

அப்பாடா இனி ஜாலி ஜாலிதான்… பும்ராகிட்ட இருந்து தப்புச்சுட்டேன்… சொல்கிறார் கிறிஸ் லின்!!

TamilSportsNews

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கோவை கிங்ஸ் அணி இன்று மோதல்

TamilSportsNews

Leave a Comment